2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எம்.ஏ.பரீட் காலமானார்

Editorial   / 2021 நவம்பர் 17 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், அ.அச்சுதன்

தமிழ் மிரர் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எம்.ஏ.பரீட், திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைத்து நேற்று (16) மாலை காலமானார்.

மரணிக்கும் போது அவருக்கு வயது 64ஆகும்.

திருகோணமலை மாவட்டம், சின்னக் கிண்ணியாவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியருமான இவர், தினகரன் பத்திரிகையின் திருகோணமலை மாவட்ட விசேட நிரூபரும் ஆவார்.

41 வருடங்கள் ஊடக அனுபமிக்கவருமான அன்னார், கபூர்நிஸாவின் அன்புக் கணவரும் இம்ரான், இஹ்ஸானா (சட்டத்தரணி), இஜாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, கிண்ணியா றகுமானியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழ் மிரர் குடும்பத்தின் சார்பாக அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X