Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 25 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட், ஹஸ்பர் ஏ ஹலீம், தீஷான் அஹமட், அ.அச்சுதன்
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், வெருகல் மற்றும் சேருவில ஆகிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகள் மூலமாக வழங்கப்படுகின்ற கடன் உட்பட ஏனைய சேவைகளை இலகுவில் பெற்றுக் கொடுக்கும் வகையிலான வேலைத்திட்டம், சேருவில பிரதேச செயலகத்தில் நேற்று (24) நடைபெற்றது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மேற்கொள்வோர் மற்றும் புதிதாக தொழில் முயற்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளவர்களுக்கு வங்கிகள் மூலம் அவசியமான கடன் உதவிகளை பெற்றுக் கொடுக்க உதவுவதே, இவ்வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தாம் கடன்களைப் பெற்றுக் கொள்கின்ற சந்தர்ப்பத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் அவர்களுக்கான கடன்களை இலகுவான முறையில் வங்கிகள் மூலம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மக்கள் வங்கி, இலங்கை வங்கி, சனச அபிவிருத்தி வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி வங்கி என்பன தமது சேவைகளை தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்க முன்வந்துள்ளன.
இந்த நிகழ்வில் சேருவில பிரதேச செயலாளர் பி.ஆர்.ஜயரத்ன, சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.பிரளாநாவன், வங்கி உத்தியோகத்தர்கள், தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago