Editorial / 2020 ஜூலை 07 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீட்
பொதுத் தேர்தலில், டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து, சஜித் பிரேமதாஸவை பிரதமராக்கினால், சிறுபான்மைச் சமூகம் பாதுகாக்கப்படுமென, ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
கிண்ணியாவில் நேற்று (06) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், “வீடமைப்பு அமைச்சராக சஜித் பிரேமதாஸ இருந்த காலப் பகுதியில், பல வீட்டுத்திட்டங்களைத் திறம்படச் செயற்படுத்தியுள்ளார்” என்றார்.
தொல்பொருள் எனும் பெயரில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகளை அபகரிப்பதற்குத் தற்போதைய ஆட்சியாளர்கள் முற்படுகிறனரெனத் தெரிவித்த அவர், இதனைத் தோற்கடிக்க டெலிபோன் சின்னத்துக்கு வாக்களிப்போமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.
49 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago