2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிறுவர் பூங்கா அபிவிருத்தி

Princiya Dixci   / 2022 மே 03 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

கிண்ணியா நகர சபையின் கீழ் உள்ள தோனா கடற்கரை சிறுவர் பூங்காவில் புதிய வகையான விளையாட்டு உபகரணங்கள், நேற்று (02) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.நிவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மின்சார ரயில் உபகரணம்,  வட்ட வடிவிலான சுற்றும் உபகரணம் என்பன அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு, சிறுவர் பாவனைக்காக விடப்பட்டன.

UNDPயின் நிதி அனுசரனையில் சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில் சிறுவர்களின் பொழுது போக்குக்காக இவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதில் கிண்ணியா நகர சபையின் பிரதித் தவிசாளர் ஐயூப் நளீம் சப்ரீன், செயலாளர் விஷ்னு மற்றும் நகர சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .