எப். முபாரக் / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை சிறைச்சாலைக் கைதிகளின் பாதுகாப்புக் கருதி, சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, திருகோணமலை சிறைச்சாலையின் அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் சில்வாவின் பணிப்பின் பேரில், பிரதான ஜெயிலர் கே.ஏ.எச்.அபேரத்தினவின் தலைமையில், உத்தியோகபூர்வமாக இன்று (11) நடைபெற்றது.
இச்சிறைச்சாலையின் 50 வருடங்கள் பழமையான சுற்றுமதில் வெடிப்புற்று, உடைந்து காணப்பட்ட நிலையிலேயே, பழைய சுற்றுமதிலை அகற்றி, புதிதாகக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், சிறைச்சாலையின் ஜெயிலர் தர உத்தியோகத்தர்கள், புனர்வாழ்வு அதிகாரிகள் உட்பட சிறைச்சாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
9 minute ago
15 minute ago
20 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
20 minute ago
48 minute ago