2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

சிவில் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

Freelancer   / 2023 டிசெம்பர் 23 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - நாமல்வத்தை வயல் பகுதியில் இன்று ஆணொருவரின் சடலமொன்று   மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை கடற்படையில் சிவில் உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிண்ணியா - குறிஞ்சாங்கேணி பகுதியைச் சேர்ந்த ரபீக் முகமது முஸம்மில் (34வயது) எனவும் தெரியவருகிறது.

கிண்ணியாவில் இருந்து நாமல்வத்தை பகுதியில் உள்ள வயலுக்கு வருகை தந்ததாகவும் பின்னர் மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக கத்தியை எடுத்துக் கொண்டு சென்றதாகவும் மாலை நேரமாகியும் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்துக்கு வராததால்  வயல் பகுதிக்கு தேடி சென்ற போது, வயலுக்குள் வரம்பில் சருக்கி விழுந்து கிடந்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X