Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எம்.ஏ.பரீத் / 2019 மார்ச் 21 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - புல்மோட்டை பகுதியில், இல்மனைட் கூட்டுத்தாபனம், கழிவு மணலை, பொது விளையாட்டு மைதானத்தில் போட்டு, அம்மணலைப் பாதுகாப்பதற்காக சுற்றுவேலி அமைத்து வருவதால், அப்பிரதேசப் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனரென, குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் எம்.முபாரக் தெரிவித்தார்.
அத்துடன், விளையாட்டு மைதானம் இன்றி, பிரதேச இளைஞர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
அவரது அலுவலகத்தில் நேற்று 20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடலோரங்களில் இருந்து பெறப்படும் இல்மனைட் மணலுக்குப் பதிலாக, கழிவு மணல் கடலோரங்களில் கொட்டப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய அவர், எனினும், மைதானத்தில் சேமித்து வைக்கப்படும் அந்த மணல், மிகக் குறைந்த விலையில் வெளியாருக்கு விற்பனை செய்யப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக, இல்மனைட் கூட்டுத்தாபத்துக்கும் பிரதேசப் பொதுமக்களுக்குமிடையில், அப்பகுதியில் அச்சமும் பதட்ட நிலைமையும் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago