2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

செல்வநாயகபுரத்தில் விளையாட்டரங்கு திறந்து வைப்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், அ.அச்சுதன், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, செல்வநாயகபுரத்தில்  நிர்மாணிக்கப்பட்ட உள்ளக பயிற்சி விளையாட்டரங்கு, வீரர்களின் பாவனைக்காக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தால் நேற்று (24) மாலை திறந்து வைக்கப்பட்டது.

இதற்காக கிழக்கு மாகாண விளையாட்டு மற்றும் அபிவிருத்தித் திணைக்களத்துக்காக ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து  6 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.  

இதன்போது, தெரிவுசெய்யப்பட்ட சில விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண விளையாட்டு, அபிவிருத்தித் திணைக்கள மாகாண பணிப்பாளர் என்.எம்.நெளபீஸ், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைத் தவிசாளர் ரட்டாயக்க , கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தலைவர் ஜனார்த்தனன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X