2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

‘சேருவில மகாவித்தியாலய ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்திக்கப்படும்’

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஜனவரி 23 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, சேருவில மகாவித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறை, மார்ச் மாதம் நிவர்த்திக்கப்படுமென, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தனர்.

அத்துடன், எதிர்வரும் 28ஆம் திகதி, நான்காம் ஆண்டுக்குரிய ஆசிரியர் ஒருவரை  உடனடியாக அனுப்புமாறும்,  கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளருக்கு, ஆளுநர் பணித்தார்.

ஆளுநருக்கும் சேருவில மகாவித்தியாலயத்தின் பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் இன்று (23) நடைபெற்ற போதே, ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.

காவன் திஸ்ஸபுரப் பகுதியில் அமைந்துள்ள சேருவில மகாவித்தியாலயத்தில், தற்போது 12 ஆசிரியர்கள் மாத்திரமே கடமையாற்றுவதாகவும் மேலும் 08 ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, நேற்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க பெற்றோர்கள் முனைந்தனர்.

எனினும், இரு ஆசிரியர்களைத் தற்காலிகமாக வழங்கி, கந்தளாய் வலயக் கல்விப் பணியகம், ஆர்ப்பாட்டத்தைத் தடை செய்திருந்தது.

இப்பின்னணியில், கிழக்கு மாகாணக் கல்வியமைச்சுக்கு முன்னால் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், நேற்று ஒன்றுகூடி, ஆசிரியர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனால், கிழக்கு மாகாணக் கல்வியமைச்சுக்கு முன்னால் பதட்ட நிலை ஏற்பட்டதுடன், திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரியின்  தலைமையில், கிழக்கு மாகாண ஆளுநருக்கு பெற்றோர்களுக்கும் இடையிலான மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X