2025 மே 01, வியாழக்கிழமை

சொந்த மாவட்டத்தில் பணியாற்ற நடவடிக்கை

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கல்வியல் கல்லூரிகளில் இருந்து புதிதாக ஆசிரியர் நியமனங்களைப் பெற்று வெளியேறும் ஆசிரியர்களுக்கு, தங்களது சொந்த மாவட்டத்தில் கடமையாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலகத்தில், நேற்று (19) இடம்பெற்ற சந்திப்பின் போதே, இக்கோரிக்கையை பிரதியமைச்சர், மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முதுபண்டாவிடம் முன்வைத்துள்ளார்.

இப்பிரச்சினைக்கான தீர்வாக, உடன் அமுலுக்கு வரும் வகையில், ஆசிரியர் பற்றாக்குறையைக் கருத்தில்கொண்டு, திருகோணமலை மாவட்ட கல்வியற் கல்லூரி ஆசிரியர்களைச் சொந்த மாவட்டத்தில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதியமைச்சர் கருத்துரைக்கையில், திருகோணமலை, கிண்ணியா வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறமையால் புதிய ஆசிரியர் நியமனங்களை தங்களது சொந்த மாவட்டத்தில் நியமனம் செய்வதால் பற்றாக்குறைக்கான தீர்வு கிட்டும் என்றார்

இந்தச் சந்திப்பின் போது, மாகாண கல்விப் பணிப்பாளர் மன்சூர், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம் உட்பட கல்வி உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .