Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 26 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக், தீஷான் அஹமட், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.ஏ.பரீத்
நாட்டு மக்கள் முன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒரு ஜோக்கராக மாறிவிட்டாரென, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.
தோப்பூரில் நேற்று (25) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், பின்கதாவல் மஹிந்தவைப் பிரதமராக நியமித்த பின்னர், ஜனாதிபதி பேசும் பேச்சுகள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாகவே காணப்படுவதாகவும் இதனால் அவர் பேசும் பேச்சுகளைக் கேட்கும் மக்கள், அவரை ஒரு ஜோக்கராகப் பார்க்கும் சூழ்நிலையே தோன்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்றைய நிலையில் ஜனாதிபதி தெரிவிக்கும் கருத்துகள் ஒவ்வொன்றையும் பார்க்கும் போது இவர் சுயநினைவில்தான் உள்ளாரா என சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்போது புதிதாக, “ரணில் விக்கிரமசிங்கவுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம்” எனும் புத்தகத்தை வெளியிடப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனச் சுட்டிக்காட்டிய இம்ராம் எம்.பி, தயவுசெய்து உடனடியாக அந்தப் புத்தகத்தை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு தாம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
தேவை ஏற்படின், தமது கட்சி சார்பாக அந்தப் புத்தகத்துக்கு அனுசரணை வழங்கத் நாம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்தப் புத்தகம் வெளியிட்டால் யார் திருடர்களைப் பாதுகாத்தது?, இனவாதிகளைப் பாதுகாத்து, இனவாதத்தைத் தூண்டியது யார்?, வெளிநாட்டு முதலீடுகளைத் தடை செய்து, பொருளாதார அபிவிருத்திகளுக்கு யார் தடையாக இருந்தது?, வேலைவாய்ப்புக்கள், அரசியல் பழிவாங்கல்களை வழங்க யார் தடையாக இருந்தது? என்பதை எம்மால் நாட்டு மக்களுக்கு ஆதாரபூர்வமாக தெரிவிக்க முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago