2025 மே 05, திங்கட்கிழமை

‘டின் மீன் உற்பத்தி தொழிற்சாலை இன்மை கவலைக்குரிய விடயம்’

Editorial   / 2018 நவம்பர் 27 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம். றனீஸ்

உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான டின் மீன் உற்பத்திசாலையொன்று, கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்படாமை கவலைக்குறிய விடயமாக அமைவதாக, திருகோணமலை மாவட்ட மேலதிக செயலாளர் கே.அருந்தவராஜா தெரிவித்தார்.

சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் கலந்தாலோசனைக் கூட்டம், திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (27) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

இக்கூட்டத்தை, திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம், திருகோணமலை மாவட்ட செயலகம், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.  

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த மாவட்ட மேலதிக செயலாளர், திருகோணமலை மாவட்டத்திலே பல வளங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியதுடன், குறித்த வளங்களைப் பூரணமாக வினைத்திறனுடன் கையாளும்போது, பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றார்.

இதேவேளை, இக்கூட்டத்தில், விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்போடு தொடர்புட்ட பல பிரச்சனைகள், தொழில் முயற்சியாளர்களால் முன்வைக்கப்பட்டன.

குறித்த பிரச்சினைகள் எதிர்காலத்தில் உரிய தரப்பினரின் கவனத்துக்குக்கொண்டு சென்று, முடியமானவளவு தீர்வுகள் வழங்கப்படும் என்று, திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளன தலைவர் குலேந்திரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X