2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

டிப்பர் மோதி முதியவர் பலி; சாரதி கைது

Editorial   / 2022 ஜனவரி 10 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில், கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த சாஹுல் ஹமீட் (வயது 76) என்பவர்  பலியாகியுள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு (09) இடம்பெற்ற இந்த விபத்தையடுத்து, டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி முதியவர், தனது காணிக்குள் மணல் இட்டு செப்பனிட்டு வந்துள்ளார். அவ் வேளையில்  உடைந்த கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், அவற்றைக் கொட்டுவதற்காக பின்பக்கமாகச் செலுத்திய வேளை, டயருக்குள் சிக்கி முதியவர் பலியாகியுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதியை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X