Editorial / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்
நிபந்தனையை மீறி, சட்டவிரோதமான முறையில் கிண்ணியா கீரைத்தீவு பிரதேசத்தில் ஆற்று மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய், ரஜஎல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான பண்டார ரத்தின நாயக்க, கிண்ணியா, ஜாவா வீதியைச் சேர்ந்த 27 வயதான பளீழ் றிஸ்வி மற்றும் தம்பலகமம் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான லோகநாதன் ரஞ்சித்குமார் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவார்.
இவர்கள் மூதூர் பிரதேசத்தில் உள்ள தீத்தான் பெட்டி பகுதியில் மண் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றிருந்தும் இடம் மாறி கிண்ணியாவில் மண் அகழ்வில் ஈடுபட்டிருந்தமை நிபந்தனையை மீறிய குற்றம் என்றும் இவர்களை மேலதிக விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட மூன்று டிப்பர் வண்டிகளுடன் கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ. ஜெனோசன் தெரிவித்தார்.
24 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
37 minute ago