Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
தீஷான் அஹமட் / 2018 டிசெம்பர் 23 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பிரதேசத்தில் மணல் ஏற்றிச் செல்லும் டிப்பர் வாகனங்கள் பயணம் செய்யும் ஒழுங்கில், விரைவில் மாற்றங்கள் செய்யப்படுமென, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அறூஸ் தெரிவித்தார்.
மணல் ஏற்றிச் செல்லும் டிப்பர் வாகனங்களால் காவு கொள்ளப்படும் உயிராபத்துகளைத் தடுப்பது தொடர்பில், திருகோணமலை மாவட்டச் செயலாளர் என்.என்.ஏ.புஷ்பகுமாரவுக்கு எடுத்துரைத்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
மூதூர் பிரதேச சபையின் தவிசாளருக்கும் மாவட்டச் செயலாளருக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, மணலுடன் செல்லும் டிப்பர் வாகனங்களை, இரவு 10 மணிக்குப் பின்னர் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதென்றும், கங்கையிலிருந்து மணல் ஏற்றி வரும் டிப்பர் வாகனங்களை, சூரங்கல் வீதியூடாகத் திருகோணமலைக்குச் செல்வதற்கு அனுமதிப்பதெனவும், மூதூர் ஊடாகச் செல்லும் டிப்பர் வாகனங்களை, 30 கிலோமீற்றர் வேகத்துக்குக் குறைவாகச் செல்வதற்குக் கட்டளை பிறப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மூதூர், பெரிய பாலத்தில் கடந்த 11ஆம் திகதி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்றில் மோதுண்டு, 29 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்ததையடுத்து, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பெரும் மோதல் இடம்பெற்றது.
இந்த மோதல் சம்பவம் தொடர்பில், பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்ற 20 இளைஞர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பிலும், தவிசாளரும் மாவட்டச் செயலாளரும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago