Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வடமலை ராஜ்குமார் / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையில் டெங்குக் காய்ச்சல் அதிகமாகப் பரவி வருவதால், பாடசாலைகளில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை உடனடியாக இடைநிறுத்துமாறு, திருகோணமலை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.மோகனேந்திரன், கடிதம் மூலம் பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளார்.
திருகோணமலை நகரசபையில் இம்மாதம் 6ஆம் திகதி நடத்தப்பட்ட கலந்துரையாடல் தீர்மானத்துக்கமைய, இவ்வாறு மேலதிக வகுப்புகளை இடைநிறுத்துமாறும் அவர் அறிவித்துள்ளார்.
மாணவர்களையும் ஆசிரியர்களையும் டெங்குத் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், திருகோணமலை நகரப் பாடசாலைகளில் காலை 07 மணிக்கு முன்னதாகவும் மாலை 06 மணிக்குப் பின்னரும் நடத்தப்படும் மேலதிக வகுப்புகளைத் தற்காலிகமாக இடை நிறுத்துமாறும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், வேகமாகப் பரவி வரும் டெங்குத் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் இந்தச் செயற்றிட்டத்தில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் திருகோணமலை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கேட்டுள்ளார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago