Editorial / 2020 ஜூன் 09 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியாற்றுமுனை கரையோரப் பகுதியில், இன்று (09) மதியம் டைனமெட் வெடிமருந்து வெடித்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனரென, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரும், கிண்ணியா தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீன்பிடிக்காக டைனமட் வெடிபொருளை, இரும்பு வெட்டும் சிறியரக வாளால் அறுத்துக் கட்டும்போது, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக, ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிண்ணியா, இடிமன், பெரியாற்றுமுனை பகுதிகளைச் சேர்ந்த 37, 26 வயது குடும்பஸ்தர்கள் இருவரே, இந்த வெடிப்புச் சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

7 minute ago
23 minute ago
31 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
31 minute ago
54 minute ago