Princiya Dixci / 2015 நவம்பர் 10 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
2015ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மீலாத் தின இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடத்துவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.நிசாம் கிழக்கு மாகாண சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் இது குறித்து கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இப்போட்டிகள் யாவும் கொழும்பு - 12, பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள பாத்திமா மகளிர் கல்லூயில் காலை 08 மணி முதல் நடைபெறும்.
சகல பிரிவுகளுக்குமான தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழி மூலமான பேச்சுப் போட்டிகளும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆரம்பப் பிரிவு - பெண்களுக்கான கனிஷ்டப் பிரிவு கலாசாரப் போட்டிகளும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளன.
சகல பிரிவுகளுக்குமான கிராஆத், குர்ஆன் மனனம், அரபு பேச்சு ஆகிய போட்டிகளும் கனிஷ்ட, இடைநிலை, சிரேஷ்டப் பிரிவு ஆண்களுக்கான கலாசாரப் போட்டிகளும் நவம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ளன.
பாடசாலையிலிருந்து மாகாண மட்டப் போட்டியில் முதலாம் இடம்பெற்ற மாணவர்களை போட்டியில் பங்குபற்றச் செய்வதுடன், போட்டியாளர்களுக்கு பாடசாலை அதிபரினால் வழங்கப்படும் அத்தாட்சிக் கடிதத்தில் போட்டி, மொழி, பிரிவு, பால் மற்றும் மாகாணம் என்பன குறிப்பிட்டு அவர்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை எடுத்துச் செல்வதற்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago