2025 ஜூலை 31, வியாழக்கிழமை

தேன் எடுத்த நபர் மீது கரடி தாக்குதல்

Gavitha   / 2016 ஜூலை 02 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கைக் காட்டுப்பகுதிக்கு தேன் எடுக்கச் சென்ற நபர், கரடி தாக்குதலுக்குள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோப்பூர் பட்டாளி புரத்தைச் சேர்ந்த சி. இராசரத்தினம் (வயது 45) என்ற நபரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டாளி புரத்தைச் சேர்ந்த ஐந்து பேர், நேற்று வெள்ளிக்கிழமை (01), மஹாவலி கங்கை பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்காகச் சென்றுள்ளனர். இதன்போது, அங்கிருந்த குறித்த நபரை, திடீரென்று வந்து பாய்ந்த கரடி தாக்கியுள்ளது.

எனினும் ஒருவாராக கரடியிடமிருந்து குறித்த நபரை காப்பாற்றிய மற்றையவர்கள் அவரை தோப்பூர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .