2026 மார்ச் 23, திங்கட்கிழமை

தென்னங்கன்றுகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை, சம்பூர் மீள்குடியேறிய மக்களுக்கு 'ரின்கோ விசன்' அமைப்பினால் தென்னங்கன்றுகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நேற்று (31) அவ்வமைப்பின் ஸ்தாபகர் கே.பிரகாஸ் தலைமையில் இடம்பெற்றது.

மாவட்டத்தில் பின் தங்கிய கிராமங்களுக்கும் மீள்குடியேறிய கிராமமங்களுக்கும்  'ரின்கோ விசன்' மரக்கன்றுகளை வழங்கி வருகின்றது. அத்துடன் சம்பூர் பத்திரகாளியம்மன் ஆலயம், நிலாவௌி 06ஆம் கட்டை லக்ஷ்மி நாராயணன் ஆலயம் மற்றும் கிண்ணியா காயத்ரி ஆலயங்களுக்கு தலா நூறு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் ரின்கோ விசன் திட்ட இணைப்பாளர் ராஜகோன் ஹரிகரன்,கிராம அபிவிருத்தி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .