2025 மே 19, திங்கட்கிழமை

தோப்பூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Thipaan   / 2016 ஜூலை 31 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், பதுர்தீன் சியானா

5.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள தோப்பூர்  ஆயுர்வேத வைத்தியசாலைக்கான அடிக்கல்லை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இன்று ஞாயிற்றுக்கிழமை (31) நாட்டி வைத்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் சுகாதார திட்டங்களை ஆரம்பித்து வைக்குமுகமாகவும் சுகாதார அமைச்சால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களைம' திறந்து வைக்குமுகமாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்ஆ.எம். நஸரின் வேண்டுகோளுக்கிணங்கவே கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், முன்னால்  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆ.ஐ.மன்சூர்  திருகோணமலை மாவட்டநாடளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், கிழக்கு மாகாண சபை உறுபினர்களான சட்டத்தரணி ஜே.எம்.லாகிர், ஆர்.எம். அன்வர்   முன்னால் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.ஹரிஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்கள் உயர் அதிகாரிகள், பணிப்பாளார்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள உள்ளுராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X