2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தாபரிப்பு பணம் செலுத்தாதவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்  

தனது மூன்று பிள்ளைகளுக்கும்  ஐம்பதாயிரம் ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்தாத 35 வயதுடைய நபரொருவரை இம்மாதம் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர்  நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான்  நேற்று உத்தரவிட்டார்.                                        

திருகோணமலை, சேருநுவர  பகுதியைச் சேர்ந்த  
இந்தச் சந்தேக நபர், தனது மூன்று பிள்ளைகளுக்கும் மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் செலுத்தி வந்த நிலையில், ஐந்து மாதங்களாக தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாரிடம் மனைவி செய்த முறைப்பாட்டை அடுத்து கடந்த  ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபரைக் கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.                            

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .