2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள போக்குவரத்து அமைச்சர்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, திருகோணமலைக்கான விஜயத்தை நேற்று வெள்ளிக்கிழமை (16) மேற்கொண்டார். மாலை 3.45 மணிக்கு திருகோணமலை புகையிரத நிலையத்துக்குச் சென்று அங்கு ஆய்வுகளை மேற்கொண்டார். இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.துரைரெட்ணசிங்கம், எம்.ஏ.எம்.மகரூப் ஆகியோரும் சென்றிருந்தனர். 

திருகோணமலைக்கும் கந்தளாய்க்கும் இடையே சேவையில் ஈடுபடும் ரயில் மற்றும் பஸ் போதிய வருமானத்தை பெற்றுத்தருவதில்லை என அங்கு அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு அமைச்சர் அப்படியானால் அந்த சேவையின் அளவினைக் குறைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அமைச்சரின் விஜயத்தின் போது திருகோணமலை . சீனக்குடா. தம்பலகாமம், கந்தளாய். புகையிரத நிலைய அதிபர்களும் பிரசன்னமாகி இருந்தனர். 

திருகோணமலை மாவட்டத்துக்கு தற்போது அதிகளவிலான சற்றுலா பிரயாணிகள் வருகை தருகின்றனர். இவர்கள் வசதியாக வந்து செல்வதற்க ரயிலில் உறங்கலிருக்கை பெட்டிகளை மேலதிகமாக இணைக்குமாறும் முதலாம் வகுப்பு பெட்டிகளை இணைத்து தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர். அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை கிண்ணியா மற்றும் மூதூர் சாலைகளுக்கும் இன்று சனிக்கிழமை (17) விஜயம் செய்யவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .