2025 மே 23, வெள்ளிக்கிழமை

திருகோணமலை சிறைச்சாலையை இடமாற்ற நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 27 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                  

திருகோணமலை நகரில் அமைந்துள்ள  சிறைச்சாலையை கப்பல்துறைப் பிரதேசத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இச்சிறைச்சாலைக்காக கப்பல்துறைப் பிரதேசத்தில் பத்து ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.  
இந்தச் சிறைச்சாலை அமையவுள்ள இடத்தை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச்.எம்.என்.சி.தனசிங்க, சனிக்கிழமை (26) சென்று பார்வையிட்டார்.

இப்புதிய இடத்தில் நவீன வசதிகளுடன் சிறைச்சாலை அமைய வேண்டுமென்பதுடன், எவ்வாறு சிறைச்சாலை அமைய வேண்டுமென்பது தொடர்பிலும் அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஆலோசனை வழங்கினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X