Niroshini / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி, ஏ.எஸ்.எம்.யாசீம்
ஐக்கிய அமெரிக்கா கிழக்கு மாகாண பாடசாலைகளின் அபிவிருத்திக்கென வழங்கிய நிதி பங்கீட்டில் திருகோணமலை மாவட்ட பாடசாலைகள் புறக்கணிப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
கிழக்கு மாகாண பாடசாலைகளின் அபிவிருத்திக்கு ஐக்கிய அமரிக்கா வழங்கிய 3,218 அமெரிக்க டொலர்கள் நிதி 8 பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளிவந்துள்ளது.
அந்தப் பாடசாலைகளின் பட்டியலைப் பார்க்கும் போது திருகோணமலை மாவட்ட பாடசாலைகள் உள்ளடக்கப்படவில்லை.
பல்வேறு வகையான அபிவிருத்திகள் தேவைப்படும் பல பாடசாலைகள் திருகோணமலை மாவட்டத்தில் இருக்கின்றன. எனினும், இம்மாவட்டத்தில் ஒரு பாடசாலையேனும் இத்திட்டத்தில் சேர்க்கப்படாமையானது கவலைக்குரியது.
எனவே,கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,எதிர்காலத்தில் இது போன்ற குறைகள் வராமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026