Thipaan / 2016 ஜனவரி 23 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எம்.அறூஸ்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத மாவட்டங்களுக்குத்தான் முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். அந்த வகையில்தான் திருகோணமலை மாவட்டத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் வைத்து, ஓட்டமாவடியைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் குழுவினர், நேற்றிரவு(22) அமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்தபோது, அவர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கட்சியின் தலைமை சகல விடயங்களையும் அறிந்து வைத்துள்ளது. சுழற்சி அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பகிர்ந்தளிக்கப்படும். தலைமையை சங்கடத்துக்குள்ளாக்க எவரும் நினைக்க வேண்டாம். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில்லாமல் பல மாவட்டங்கள் இருக்கின்றது. கட்சியின் நலன் கருதி சரியான முடிவுகளை எடுத்து வருகின்றோம் என்றார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago