2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

திருகோணமலையில் அறுவருக்கு குளவிக்கொட்டு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக், ஏ.எஸ்.எம்.யாசீம்  

திருகோணமலை மாவட்டத்தில் குளவிக் கொட்டுக்குள்ளாகிய 06 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

கிளிக்குஞ்சுமலைப் பகுதியில் திருகோணமலை நகரசபையில் சுகாதார ஊழியராக கடமையாற்றுகின்ற  கே.பிரகாஸ் (வயது 25),  கந்தளாய் வாத்தியகம பகுதியில் மீன் வியாபாரியான எம்.சுனில் சாந்த (வயது 52), மஹாதிவுல்வெவ, தெவனிபியவரப்  பகுதியில் சுகதபாலகே சுமித் (வயது 33) ஆகிய மூவரும்  செவ்வாய்க்கிழமை குளவிக் கொட்டுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள்  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறிருக்க, கந்தளாய்ப்; பிரதேசத்தில் திங்கட்கிழமை (12) குளவிக் கொட்டுக்குள்ளாகிய 03 பேர், கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

பனைமரத்திலிருந்த குளவிக்கூடு கலைந்து, வீதியில் சென்றுகொண்டிருந்த இவர்களுக்கு கொட்டியுள்ளது.
ஏ.எஸ்.சம்சுதீன் (வயது 34), எம்.இ.நௌபீஸ் (வயது 29), முகம்மட் நிப்றாஸ் (வயது 12) ஆகியோரே குளவிக் கொட்டுக்குள்ளாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .