Niroshini / 2015 நவம்பர் 09 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
ரோட்டரி மாவட்ட இலங்கை மற்றும் மாலைதீவு அறக்கட்டளை கருத்தரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் மாவட்ட ஆளுநர் ஜார்ஜ் ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது,மாவட்ட ஆளுநர் ஜார்ஜ் ஜேசுதாசன் 'எங்கள் நோக்கம் இன்று' எனும் தலைப்பில் உரையாற்றினார்.
இதேவேளை, திருகோணமலை தலைவர் கிறிஸ்ரி வரவேற்புரையையும் முன்னாள் மாவட்ட ஆளுநர் கிரிஷ் ராஜேந்திரன் 'மாற்றம் வருகிற நேரத்தில் அறக்கட்டளை' எனும் தலைப்பிலும் ரோட்டரி மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் சுசில் சந்திரபால 'குளோபல் கிராண்ட் விண்ணப்ப நிரப்புதல்' எனும் தலைப்பிலும் முன்னாள் மாவட்ட ஆளுநர் ரவி வடலமணி 'உலகில் நன்மை செய்வது' எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.
மேலும்,மாவட்ட ஆளுநர் ஜார்ஜ் ஜேசுதாசன் கருத்தரங்கு பற்றி இறுதி உரையை நிகழ்தினார்.
இதில்,இலங்கை மற்றும் மாலைதீவுகளில் இருந்து சுமார் 200 ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


49 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
58 minute ago
1 hours ago