2025 ஜூலை 23, புதன்கிழமை

திருகோணமலையில் மரக்கறி வியாபாரிகள் ஆர்ப்பாட்டப் பேரணி

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார், எப்.முபாரக்

திருகோணமலை நகரசபைக்குச் சொந்தமான பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவரும்; மரக்கறி வியாபாரிகள் திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டப் பேரணியில்; ஈடுபட்டனர்.

திருகோணமலை பொதுச்சந்தை வியாபாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது பொதுச்சந்தைக்கு முன்பாக ஆரம்பமாகி  கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தைச் சென்றடைந்தது. இதன்போது, ஆளுநருக்கான மகஜரையும் வியாபாரிகள் கையளித்தனர்.

பொதுச்சந்தையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கடைகளுக்கு வருடாந்தம் அதிகரிக்கப்படும் வாடகையைக் குறைக்க வேண்டும், சந்தைக்கு வெளியில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளை நிறுத்த வேண்டும், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும், வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையே வியாபாரிகள் முன்வைத்தனர்.

2009ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இச்சந்தையில் எவ்வித புனரமைப்பும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், நகரசபையானது தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும் எனவும் வியாபாரிகள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .