Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 நவம்பர் 02 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
இலங்கை மருத்துவ சபையின் சுயாதீன தன்மை ஆபத்தில் என்ற கோசத்தினை முன்வைத்து திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள், திருகோணமலை வைத்தியசாலைக்கு முன்பாக, புதன்கிழமை (02) மதியம் 12.40 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு போராட்டத்தில் கலந்து கொண்ட வைத்தியர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
'மாலேபேயில் தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதை ஆரம்பத்தில் இருந்து ஏற்றுக்கொள்ளவில்லை. சரியான முறையில் வைத்தியர்கள் பயிற்சியளிக்கப்பட்டு வெளியேர வேண்டும்.
தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களை ஆரம்பித்து. வைத்திய சேவையினை தரமற்ற நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என நாங்கள் வலியுறுத்துகின்றோம்' என குறிப்பிட்டார்.
நோயாளிகளின் உயிர் இடைநிலையில், ளுயுஐவுஆஐத் தடை செய், இலங்கை மருத்துவ சபையின் சுயாதீனத் தன்மை ஆபத்தில், இலங்கை மருத்துவ சபையில் வெளிச் சக்திகளின் தலையீட்டை நிறுத்து போன்ற வாசங்களை எழுதிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் ஏந்தியியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago