Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் ஏற்பாடு செய்துள்ள ஆய்வு மாநாடு, நிலைத்திருக்கும் பிராந்திய அபிவிருத்திக்கான அறிவு வெளிப்பாடு எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளதாக, வாளாக முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.
நாளையும் (14) நாளை மறுதினமும் (15), மாநாட்டை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஏலவே கோரப்பட்டதன் அடிப்படையில், நூற்றுக்கும் அதிகமான ஆய்வுக்கட்டுரைகள் கிடைக்கப்பெற்ற நிலையில், அதிலிருந்து 75 கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
திருகோணமலை கோணேச புரியிலுள்ள பல்கலைக்கழக வாளாகத்தில் நடைபெறும் இவ்வாய்வு மாநாட்டுக்கு, கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெயசிங்கம் உட்பட, பல இந்திய, இலங்கை பேராசிரியர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதார விஞ்ஞானம், மருத்துவம்,
முயற்சியாண்மை, சுற்றுலாத்துறை, பொருளியலும் விவசாயமும், சூழல் விஞ்ஞானம், மொழியும் மொழியியலும், ஊடகமும் தொடர்பாடலும், மானிடவியலும் அழகியலும் போன்ற விடயதானங்களில் கட்டுரைகள் பெறப்பட்டு, ஆய்வு மாநாட்டில் சமரப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago