2025 ஜூலை 31, வியாழக்கிழமை

திருட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது

Thipaan   / 2016 ஜூன் 28 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ எம்.ஏ.பரீத்

கிண்ணியாப் பகுதியில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த, மூதூர் மற்றும் தோப்பூர் பகுதிகளைச் சேர்ந்த இருவரை, நேற்றுத் திங்கட்கிழமை (27) கைதுசெய்துள்ளதாக கிண்ணியாப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து ஆறு கையடக்கத் தொலைபேசிகள், இரண்டு சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா, சூரங்கல் பகுதியிலுள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை இலாவகமாக திருடிச் சென்ற வேளையில், அங்கிருந்த பொதுமக்கள், அவர்களைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை கிண்ணியாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .