Princiya Dixci / 2015 நவம்பர் 04 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கந்தளாய் பிரதேசத்தில் நீண்ட காலமாக திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நபரொருவருக்கு, 06 மாதங்கள் சிறைத்தண்டனையும் 10,000 ரூபாய் தண்டப்பணமும் விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவன் திஸாநாயக்க, நேற்று செவ்வாய்க்கிழமை (03) தீர்ப்பளித்தார்.
49 வயதுடைய நபருக்கே இவ்வாறு அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு, கந்தளாய் நகரம் மற்றும் அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் வீடுகளில் காணப்படும் இரும்புகளைத் திருடுவதோடு, புகையிரப்பாதைகளில் காணப்பட்ட இரும்புகளை அனுமதியின்றித் திருடி விற்பனை செய்து வந்துள்ளார்.
சந்தேக நபருக்கெதிராக குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டமையை அடுத்து நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.
37 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago