2026 மார்ச் 23, திங்கட்கிழமை

திருமலைக்கு இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம்

Niroshini   / 2015 நவம்பர் 15 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்,ஏ.எம்.ஏ.பரீத் 

இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை மதியம்  2.00 மணிக்கு திருகோனமலையில் உள்ள  சனத்தொகை சேவைகள் லங்காவின் மருத்துவ சிகிச்சை நிலையத்துக்கு விஜயம் செய்தனர்.

இக்குழுவில்  10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கியிருந்தனர்.

இதன்போது,இலங்கையில் உள்ள குடும்ப நலன்கள் சம்பந்தமான விடயங்களை பற்றி கலந்துரையாடியதுடன் இவ் நிலையத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகள் குறிப்பாக, மருத்துவ உதவிகள் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விடயங்கள், பிறப்பு மற்றும் பாலுறுப்புகளில் ஏற்படும் புற்று நோய்கள் தொடர்பான விடயங்களை  கண்டறிவது தொடர்பிலும் அவற்றிற்கான சிகிச்சைகளை வழங்குவது தொடர்பிலும் ஆராய்ந்த்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .