Niroshini / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் ஒன்றினை வழங்க வேண்டுமென கந்தளாய் முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் செயலாளர் உவைஸ் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை,மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமில்லை.
ஆதலால் இருக்கின்ற மாவட்டங்களை விட்டு விட்டு இல்லாத ஒரு மாவட்டத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதே சாலச்சிறந்தது.
கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் என்பத்தி மூன்றாயிரம் வாக்குகளை பெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு பிரதியமைச்சர் பதவி கூட வழங்கப்படவில்லை.
அதேநேரம் முஸ்லிம் காங்கிரஸ் அம்மாவட்டத்தில் நாடாளுமன்ற அங்கத்துவம் கிடைத்திருந்தால் இன்று திருகோணமலையில் ஒரு இராஜங்க அமைச்சர் நியமிக்கப்பட்டிருப்பார்.
எனவே, முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் நன்றாக சிந்தித்து திருகோணமலை மாவட்டத்துக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026