Niroshini / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
சமூக ஆரிவலர்கள் இணைந்து ஏற்பாடு செய்த விழுது ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தின் ஸ்தாபகர் அமரர் சாந்திக்கான அஞ்சலிக் கூட்டம் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது..
இந்நிகழ்வில்,திருமலையில் சமூக அமைப்புகளுக்கு வித்திட்ட அமரர் சாந்தி எனும் தலைப்பில் ஊடகவியலாளரும் அகம் நிறுவனத்தின் மதியுரைஞருமான பொ.சற்சிவானந்தம்,அரசியல் மற்றும் எழுத்துதுறையில் அவருடைய பதிவுகள் பற்றி அரசியல் ஆய்வாளர் ஆ.யதிந்திரா,திருமலை அரசியலில் பெண்களின் பங்களிப்பு பற்றி ஜெ.எஸ்.புஸ்பலதா,
கலை இலக்கிய அரசியலில் அமரின் வகிபங்கு பற்றி காயத்திரி நளினகாந்தன்,நல்லாட்சியில் அரச சேவை வழங்குநர்களின் சமூக பொறுப்பு கூறல் பற்றி செ.ராஜசேகர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இதேவேளை,விழுது அலுவலகர் செல்வி தி.ஜெனனி, அமரா சங்க தலைவி வ.றீட்டாமலர் ஆகியோர் கவியாஞ்சலிகளும் நிகழ்த்தினார்கள்.
இதில்,பெருமளவிலான சமூக ஆர்வலர்கள், தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026