2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

திருமலையில் பொலிஸ் தினம் அனுஸ்டிப்பு

Niroshini   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார், எப்.முபாரக்

149ஆவது பொலிஸ் தினம் இன்று  திருகோணமலையில் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது,திருகோணமலை பொலிஸ் பிரிவில் உள்ள 11 பொலிஸ் நிலையங்களைச் சேரந்த பொலிஸாரும் விசேட அதிரடிப்படை வீரர்களும்  மரியாதை அணிவகுப்பு வழங்கினார்கள்.

இந்நிகழ்வில்,கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ பிரதம் அதிதியாகவும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அபேய குணவர்த்தன, மாகாண அமைச்சர் ஆரியவதி கலபதி, கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் எச்.எம்.ஜே.ரசைறோ, சீனக்குடா விமானப்படை தளபதி எயார் கொமடோர் சாகர கொட்டகதெனிய,  இராணுவத்தின் 22வது படைப்பரிவு  கட்டளையிடும் அதிகாரி பிரிஹேடியர் ரோகித தர்மசிறி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

மெக்கெய்சர் விளையாட்டு மைதான முன்னறில் ஆரம்பித்த இந்த அணிவகுப்பு கடற்படைத்தள வீதி, பிரதான விதி வழியாக திருகோணமலை பொலிஸ் தலைமையத்தை சென்றடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .