Niroshini / 2015 செப்டெம்பர் 10 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பங்கேற்கும் பொது அமைப்புகள் இணைந்து ஆரம்பித்த பெண்கள் இணைய வலையமைப்பின் மாதாந்தக் கூட்டம் திரியாய் பலநோக்கு கட்டடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,ஒவ்வொரு கிராமங்களிலிருந்தும் மூவரடங்கிய 30 பேர் கலந்து கொண்டு யுத்தத்துக்குப் பின்னரான மீள்குடியேற்றக் கிராமங்களின் மாதர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன.
இதன்போது,விசேட பிரதிநிதியாக அகம் நிறுவனத்தின் மதியுரைஞர் பொ.சட்சிவானந்தம் கலந்து கொண்டு சமூகப் பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது, அப்பிரச்சினைகளை அதிகாரிகளின் கவனத்துக்கு சமர்ப்பித்து எவ்வாறு தீர்வு காண்பது பற்றி ஆலோசனை வழங்கினார்.
இதில் பின்வரும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டன,
மீள் குடியேறிய திரியாய் கிராமத்தில் யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளன.சுற்றுச் சுழலில் இதுவரை 11 பேர் யானைத்தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.
கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது பனம்பழம் பருவகாலம் ஆரம்பித்துள்ளதால் யானைகள் கிராமங்களை நோக்கிப் படையெடுப்பதாக தெரிவிக்கப்பட்டன.
மேலும்,யானை பாதுகாப்பு வேலி போடப்பட வேண்டிய தேவை குறித்தும் 2010ஆம் ஆண்டு மீள் குடியேற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சமுர்த்தி வழங்கப்படவில்லை எனவும் மீள்குடியேற்றப்பட்ட 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நிரந்தர வீட்டுத் திட்டம் வழங்கப்படவில்லை எனவும் இவ்விடயம் சம்மந்தமாக எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் நேரடி கவனத்துக்கு கொண்டு வந்து எதிர்வரும் 19ஆம் திகதி விளக்கமளிப்பதெனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டன.
இதேவேளை, திரியாய் மகா வித்தியாலய அதிபர் சௌந்தரராஜா கல்விப் பிரச்சினை சம்மந்தமாகவும் எடுத்துக் கூறினார்.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026