2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

தகவல் வழங்கும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் தகவல் வழங்கும் உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் தகவல் உரிமை சட்டம்  தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விசேட செயலமர்வு, திருகோணமலை ஜேகொப் பாக் ஹோட்டலில் நேற்று (12) நடைபெற்றது.

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், திருகோணமலை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள அரச நிறுவனங்களில் கடமையாற்றும் தகவல் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு தங்களது அனுபவங்கள் மற்றும் எதிர்கொண்ட பிரச்சினைகளை எடுத்துரைத்ததுடன், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் விளக்கங்களை தகவல் அறியும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ ரணசிங்க மற்றும் தேசிய ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஜகத் லியனாரச்சியும் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபேகுணவர்தன, திருகோணமலை மாவட்ட மேலதிக செயலாளர் கே.அருந்தவராஜா உட்பட தகவல் வழங்கும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .