2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

தங்கையின் கணவரை எரித்த, தம்பியும் அக்காவும் கைது

Sudharshini   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

கந்தளாய் பிரதேசத்தில் ஒருவரை எரித்து கொலை செய்ய முயற்சித்த இருவரை, இன்று சனிக்கிழமை(12) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். 

கந்தளாய், பேராறு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை(11) இரவு குடும்ப தகராறு காரணமாக, தங்கையின் கணவரை அக்காவும் தம்பியும் இணைந்து எரித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த குறித்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் வாக்குமூலத்துக்கு அமையவே பொலிஸார், அக்காவையும் தம்பியையும் கைதுசெய்துள்ளனர்.    

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .