Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கதிரவன்
கிழக்கு மாகாண கல்விப் பண்பாடு விளையாட்டு மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி, தனது நிதி ஒதுக்கீட்டில் இருந்து, திருகோணமலையில் உள்ள 29 சங்கங்களுக்கும் 8 சுயதொழில் செய்வோருக்கும் நிதியுதவி வழங்கியுள்ளார். இவர்களுக்கான கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை (04) காலை, அமைச்சில் நடைபெற்றது.
8 பாடசாலைகளுக்கு நிழற்பட கருவிகள் பெற்றுக் கொள்வதற்காக தலா ஓர் இலட்சம் ரூபாய்களுக்கான கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், 2 மயானங்களின் அபிவிருத்திக்கென ஓர் இலட்சம் ரூபாய்களும், விளையாட்டுக் கழகங்கள் மூன்றுக்கு, உபகரணங்கள் பெற்றுக்கொள்வதற்காக தலா 50,000 ரூபாய்களும் வழங்கப்பட்டன.
அமைச்சர் சி.தண்டாயுதபாணி அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் கூறியதாது,
“அரச இயந்திரம், தனியார் துறையினருடன் ஒப்பிடும் போது, மிகவும் மந்த கதியிலேயே இயங்குகின்றது. உங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு விட்டது என்று நீங்கள் இருந்துவிடக்கூடாது. உரிய அலுவலகங்களுக்கு சென்று, அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இந்த நிதியினை பெற்று, காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக உரிய திணைக்களங்களுக்கும் பிரதேச செயலகங்களுக்கும் நாம் கடிதம் மூலம் அறிவித்தல் கொடுத்துள்ளோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து, செயற்படுவதனால், எமக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், கிடைக்கும் நிதியில் இருந்து இவை வழங்கப்படுகின்றது. மேலும். திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாங்காய்யூற்று கிராமமும், வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உப்பூறல் சீனன்வெளி கிராமங்களும், தலா 85 இலட்சம் செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு உள்ளாக்கப்பட உள்ளது.
எனது அமைச்சுக்கு கிடைக்கும் நிதியில் இருந்து இது பயன்படுத்தப்பட உள்ளது. அதுபோன்று அம்பாறை மாவட்டத்தில் வளத்தாப்பிட்டி கிராமமும் அபிவிருத்திக்கு உள்ளாக்கப்பட உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago