Princiya Dixci / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தையின் வானில் சிக்குண்ட 2 வயது குழந்தை பலியான சம்பவம் ஒன்று, இன்று (07) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தந்தை, திருகோணமலைக்கு திருமண வைபவத்துக்கு செல்ல உள்ள நிலையில், வீட்டில் வைத்து வானை பின்னால் எடுத்த போது, அதற்குள் சிக்குண்டு தனது மகள் ஸ்தலத்தில் பலியானதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.
இவ்வாறு உயிரிழந்த குழந்தை, தம்பலகாமம் நாயன்மார் திடலை சேர்ந்த ஆர்.நசிட்றா (வயது 02) என பொலிஸார் தெரிவித்தனர்.
வான் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், குழந்தையின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
40 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
7 hours ago