2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தமிழகத்தின் மூன்றாம் கட்ட நிவாரண உதவி

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

இந்தியா - தமிழ்நாட்டு அரசால் வழங்கப்பட்ட மனிதாபிமான மூன்றாம் கட்ட உதவி, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவிலும் நேற்று (23) வழங்கப்பட்டன.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வேண்டுகோளிற்கிணங்க, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இவை வழங்கப்பட்டன.

இதில் அரிசிப் பொதி என்பன விசேட தேவையுடோர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளோருக்கும் சிறுநீரக நோய், இருதய நோய் கொடுப்பனவு மற்றும் காத்திருப்புப் பட்டியலில் உள்ளோர் உள்ளடங்களாக நிவாரணப் பணி இடம்பெற்றன.

பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இவ் மனிதாபிமான உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இதில் சமூக சேவை உத்தியோகத்தர் ப.சுதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .