2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

தமிழரசு கட்சி விவகாரம் வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2024 ஜூன் 01 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவிற்கு எதிராக,திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருந்த கட்டாணை உத்தரவு, மீண்டும் ஜூலை19 ந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வழக்கு மே 31ஆம் திகதி மீண்டும் மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில்,எதிராளிகள் மற்றும் வழக்காளி ஆகியோருக்கிடையில் வழக்கை,சமரசமாக இருதரப்பு உடன்பாட்டுடன் முடிவுக்கு கொண்டுவர இணக்கம் காணப்பட்ட போதும்,அனைத்து எதிராளிகள் மற்றும் வழக்காளியின் உடன்பாட்டிற்கான,எழுத்து பூர்வ சமர்ப்பணங்களை மன்றிற்கு முன் வைப்பதற்கு கால அவகாசம் இரு தரப்பாலும் கோரப்பட்டது.

இந்நிலையில் வழக்கு ஜூலை19 ந் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X