Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் பொதுக் கூட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் நியமிக்கப்பட்ட மறுசீரமைப்பு குழுவின் தலைமையில், கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் (28) நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில்லுள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவுகளின் அடிப்படையில் மூல கிளைகள் உருவாக்கப்பட்டு, அதனுடாக திருகோணமலை, பட்டினமும் சூழலும், தம்பலகாம்ம், மூதூர், வெருகல் மற்றும் திரியாய் என ஆறு கோட்டங்களாக உருவாக்கி, மீண்டும் அதில் இருந்து தெரிவு செய்யப்பட்டு மாவட்டக் குழு தெரிவுகள் நடைபெற்றன.
இதன்போது மாவட்டத் தலைவராக கட்சியின் மூத்த மத்திய குழு உறுப்பினர் ச.குகதாசன் தலைவராகவும், நகராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர். க.செல்வராஜா (சுப்ரா) செயலாளராகவும் மீண்டும் போட்டி எதுவும்மில்லாமல் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
பொருளாளராக பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெ.சுரேஸ் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். உப தலைவராக விஜயகுமார் மற்றும் உப செயளாலராக இரா.இரட்னசிங்கம் தெரிவுசெய்யப்பட்டனர்.
உப செயலாளர் தெரிவுக்கு வெருகல் கோட்ட தலைவர் சுந்தரலிங்கம் முன்மொழியபட்டு, அவர் அத்தெரிவில் இருந்து தானாகவே விலகியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago