Editorial / 2020 ஜூன் 22 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
“நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ் மக்களை பிரநிதித்துவப்படுத்தி பல கட்சிகள் களமிறங்கியுள்ளபோதும் தமிழ் மக்கள் சரியான கட்சிக்கு வாக்களிப்பார்கள்” என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது உருவாக்கப்பட்டிருந்தது. இதிலிருந்து பிரிந்து சென்றுள்ள கட்சிகளும், நபர்களும் தங்களுக்குள்ளும் இணக்கம் ஏற்படாமல் சுய அரசியல் இலாபங்களுக்காக தொடர்ந்தும் பிளவுபட்டு வருகின்றமையானது தமிழ் மக்களின் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு பிரிந்து சென்றவர்களுக்கான பகிரங்க அழைப்பை விடுத்திருந்தும் இவர்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை குறை கூறுவதையே தங்களுடைய அரசியலாக கொண்டிருக்கின்றார்கள்.
“எனினும், உலக அரங்கில் பேசப்படுகின்ற, செவிசாய்க்கின்ற தமிழ் மக்களுக்கான கட்சியாகவும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தமிழ்த் தேசிய கூட்மைப்பே இருக்கின்றது என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள்.
“இதனால் மக்கள் சரியான கட்சிக்கு தமது வாக்கை அளிப்பார்கள் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இம்முறை தமிழ் மக்களுக்கான நீண்டகால தீர்வுடன் சேர்த்து, தமிழ் மக்களின் ஏனைய எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் விதத்தில் தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.
9 minute ago
25 minute ago
33 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
33 minute ago
56 minute ago