Editorial / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
அஞ்சல் திணைக்களத்தின் அனைத்துத் தொழிற்சங்கங்களும், நேற்று (13) முதல் 32 மணி நேர அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சாந்த குமார மீகம இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனால் தம்பலகாமம் பகுதியிலுள்ள உப தபாலகங்களும் இன்று (14) மூடியிருந்தன. தம்பலகாமம் உபதபாலகம், கல்மெடியாவ உப தபாலகம் உள்ளிட்ட அனைத்து தபாலகங்களும் மூடப்பட்டு, வெறிச்சோடிக் காணப்பட்டன. தபாலகங்களுக்குச் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சேவையுடன் தொடர்புடைய தங்களது பிரச்சினைகள் உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டன.
திங்கட்கிழமை 13ஆம் திகதி மாலை 4 மணிமுதல், இன்று 14ஆம் திகதி நள்ளிரவு வரை இந்த அடையாள பணிப் புறக்கணிப்புத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago