2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தம்பலகாமம் அரசினர் வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் அப்துல் ஹலீம், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், ரிஷா

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, திருகோணமலை, தம்பலகாமம் அரசினர்  பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் இன்று (16) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

24 மணித்தியாலயமும் வைத்தியசாலையைத் திறந்து, சேவைகள் மேற்கொள்ள வேண்டும், வைத்தியர் பற்றாக்குறை, தாதியர் பற்றாக்குறை, அம்பூலன்ஸ் வசதி, வைத்தியசாலை தரமுயர்த்தப்படல் வேண்டும், நோயாளர்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைத்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மூவினத்தையும் சேர்ந்த மதகுருமார்கள், பெண்கள், இளைஞர்கள்  உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தின் காரணமாக போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X