Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
ஏ.எம்.ஏ.பரீத் / 2017 நவம்பர் 15 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, தம்பலகாமம் ஆதி கோணஸ்வர ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள துர்க்கை அம்மன் ஆலயத்தில், இன்று (15) அதிகாலை உண்டியல் உடைக்கப்பட்டு, முழுமையாகத் தூக்கிச் செல்லப்பட்டுள்ளதென, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில், ஆலய நிர்வாகத்தினரால், இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டில், “இப்பிரதேசத்தில் மிகவும் பழைமையான இந்த ஆலயத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகப் பணம் எடுக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு வந்த உண்டியல் திருட்டுப்போயுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்து.
இது குறித்த மேலதிக விசாரணையை, தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .