2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தம்பலகாமம் பிரதேச சபையின் பட்ஜெட் தோல்வி

Princiya Dixci   / 2020 நவம்பர் 25 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீட்

தம்பலகாமம் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) தோல்வியடைந்துள்ளது. 

நிதியறிக்கை விசேட அமர்வு, பிரதேச சபைத் தவிசாளர் எச்.தாலிப் அலி தலைமையில், சபை மண்டபத்தில் இன்று (25) நடைபெற்றது.  

இதன்போது, எதிராக 09 வாக்குகளும், ஆதரவாக 05 வாக்குகளும், நடுநிலையாக 02 வாக்குகளும் அளிக்கப்பட்டு, நிதியறிக்கை தோற்கடிக்கப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச சபையில் தவிசாளர் உட்பட 16 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்கள். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X